
கண்ணம்மாவுக்கு எதிராக வெண்பா செய்த சதி செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாரதி வீட்டில் எல்லோரும் இருக்க தீவிரவாதி போல தண்டபாணி என்ற கேரக்டர் அறிமுகம் ஆகிறது. பிறகு அவர் பாரதியின் நெருங்கிய நண்பர் என தெரிய வருகிறது.

அதற்கு அடுத்ததாக பாரதி மற்றும் தண்டபாணி என இருவரும் வெளியே செல்லும்போது கண்ணம்மா கழுத்தில் மாலையில் இருந்த விஷயம் என அனைத்தையும் சொல்கிறார். தண்டபாணி இதெல்லாம் தெய்வ சக்தி என சொல்ல அதெல்லாம் ஒன்றும் கிடையாது என பாரதி மறுக்கிறார்.
பிறகு இருவரும் ஸ்கூலுக்கு போக அங்கு பாரதி கண்ணம்மாவும் பார்த்து பேசிக்கொள்வதை பார்த்து தண்டபாணி இருவருக்கும் காதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அதற்கு அடுத்ததாக திரும்பவும் ஒரு பரிகாரம் செய்யலாம் அப்போது மாலை கண்ணம்மா கழுத்துக்குப் போனால் வாழ்க்கையில் நீங்க ரெண்டு பேரு தான் ஒன்று சேருவீர்கள் என்பது கடவுள் திட்டம் என சொல்ல பாரதியும் இதை முயற்சி செய்ய முடிவு செய்கிறார்.

அடுத்து வெண்பாவும் சௌந்தர்யாவும் ரூமில் இருக்கும் போது அங்கு சம்பளம் வாங்குவதற்காக வரும் கண்ணம்மா சௌந்தர்யாவிடம் செல்லும் போது வெண்பா காலால் தடுத்து விட கண்ணம்மா நிலை தடுமாறி டேபிளின் மீது இருந்த தண்ணீர் கிளாசை சௌந்தர்யா மீது கொட்டி விடுகிறார்.
இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.