பாரதி கண்ணம்மா சீரியலில் அதிரடி மாற்றம் நடந்துள்ளது.

Bharathi Kannamma 2 Time Change Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ரோஜா சீரியல் பிரபலம் சிப்பு சூரியன் நாயகனாக நடிக்க வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இனி திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது.

ஆமாம் வரும் சனிக்கிழமை முதல் பாரதி கண்ணம்மா சீரியல் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகாது என தெரியவந்துள்ளது. காரணம் சனிக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சனிக்கிழமைகளில் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் ஒளிபரப்பு நிறுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.