பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் பல்பு வாங்க அதன் நேரத்தை மாற்றி உள்ளது விஜய் டிவி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.

டிஆர்பியில் ஓப்பனிங் என்னதான் நன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் ரேட்டிங் குறைந்து கொண்டே வருகிறது. பாரதி கண்ணம்மா 2 சீரியல் போட்டியாக ஒளிபரப்பாகி வரும் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் ரேட்டிங் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதே சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி சீரியல்கள் நல்ல வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்று வருகின்றன.

இதன் காரணமாக ரசிகர்கள் விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டும் என கருத்து கூறி வந்த நிலையில் தற்போது விஜய் டிவி அதற்கேற்றார் போல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

ஆமாம் வரும் நாட்களில் சிறகடிக்க ஆசை சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு அடுத்ததாக மகாநதி சீரியல் 9.30 மணிக்கும் பல்பு வாங்கும் பாரதி கண்ணம்மா 2 இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தெரிய வந்துள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் அடக்கடவுளே இது என்ன அர்ஜுன் சாருக்கு வந்த சோகம் என பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலை கலாய்த்தும் வருகின்றனர்.