சௌந்தர்யாவை கவுக்க வெண்பா புது திட்டம் போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஷர்மிளா என் திட்டமெல்லாம் வேஸ்டா போச்சு என பாரதி வெண்பாவை ரிஜெக்ட் செய்ததை நினைத்து புலம்பி கொண்டு இருக்க வெண்பா போதும் நிறுத்துமா என சத்தம் போடுகிறார்.

அடுத்து வெண்பா நான் கால்ல போடுற செப்பல்ல இருந்து என்னை கட்டிக்க போற புருஷன் வரைக்கும் எதுவா இருந்தாலும் நான் செலக்ட் பண்றதும், ரிஜெக்ட் பண்றதுதான் இருக்கணும். இப்போ இந்த நிமிஷம் சொல்றேன் பாரதி தான் என் புருஷன் நீ சொன்னா மாதிரி இந்த வீட்டோட மருமகள் ஆகி பாரதியை பொட்டி பாம்பா அடக்கி நான் என் பேச்சை கேட்க வைக்கிறேன் என சபதம் எடுக்கிறாள்.

விஜய் இத முன்னாடியே சொல்லி இருந்தா அம்மா ஏதாவது பிளான் போட்டு இருப்பாங்க என சொல்ல இப்போ மட்டும் என்ன பிரச்சனை? சௌந்தர்யா அத்தையை கரெக்ட் பண்ணா எல்லாம் சரியாயிடும், என்னுடைய டார்கெட் அவங்கதான் என சொல்கிறார்.

மறுபக்கம் கண்ணம்மா தன்னுடைய அம்மாவுக்கு மருந்து கொடுக்க மறந்து இரவு சாந்தி தூங்கிவிட்டதால் லைட் போட அகிலன் கோபப்பட்டு பேச சண்முகம் வாத்தியார் முதல் முறையாக கண்ணம்மாவிற்கு சப்போர்ட் செய்து அவனை திட்டுகிறார். இதை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து மறுநாள் வெண்பா புடவை கட்டிக் கொண்டு வந்து தன்னுடைய அம்மாவிடம் காட்ட அவர் ஆச்சரியப்படுகிறார். சரி வா பாரதி கிட்ட காட்டி எப்படி இருக்குன்னு கேட்கலாம் என சொல்லி பாரதியிடம் சென்று கருத்து கேட்க பாரதி முகத்தில் அடித்தார் போல நல்லாவே இல்லை என சொல்ல ஷர்மிளா ஷாக் ஆகிறார்.

அடுத்து பாரதி உனக்கு அந்த மாடர்ன் டிரஸ் தான் சரியா இருக்கும் நீ அதையே போட்டுக்க என சொல்லி அங்கிருந்து கிளம்ப வெண்பா இது எதிர்பார்த்ததுதான், என்னுடைய டார்கெட் சௌந்தர்யா ஆன்ட்டி தான் என சொல்லி கொண்டு இருக்க அப்பொழுது சௌந்தர்யா வர புடவையில் வெண்பாவை பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்க என பாராட்டுகிறார்.

மேலும் என்ன திடீர்னு புடவை எல்லாம் கட்டிட என கேட்க உங்க கூட ஸ்கூலுக்கு வரலாம்னு நினைச்சேன் பாரதி மசாலா கம்பெனி பொறுப்பை ஏத்துக்க போறான் நான் அவன் இடத்தில் இருந்து ஸ்கூல் வேலையை பார்க்கலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க எனக் கேட்க சௌந்தர்யா தாராளமா வந்து பாரு என சொல்லி செல்வத்திடம் அதற்கான வேலைகளை செய்யுமாறு கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா பாரதிக்கு ஒரு கிப்ட் ஒன்றை தயார் செய்ய அப்போது சாந்தி வாட்டர் பாட்டிலில் ஏதோ மருந்து வாசனை வருவதாக எடுத்து வந்து கொடுக்க கண்ணம்மாவுக்கு வெண்பா மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.