சௌந்தர்யா கண்கலங்க பாரதியை திருத்த கண்ணம்மா முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா மதுவுடன் ஸ்கூலுக்கு வரும்போது வழியில் கோவிலில் வண்டியை நிறுத்தி மது அர்ச்சனை செய்துவிட்டு ஸ்கூலுக்கு போகலாம் என சொல்கிறார்.

கோவிலில் ஐயர் பெயர் நட்சத்திரம் ராசி கேட்க கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் தவிக்க பிறகு சாந்தி சொன்ன விஷயம் ஞாபகம் வந்து ராசி நட்சத்திரத்தை கூறுகிறார். அதன் பிறகு தேங்காயில் பூ விழுந்திருப்பதை பார்த்து பூசாரி இனி எல்லாம் நல்லதே நடக்கும் என சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு இருவரும் கிளம்பி ஸ்கூலுக்கு வர ஸ்கூலில் அப்போது ஆடிட்டோரியத்தை பார்த்து உனக்கு நாலாவது படிக்கும் போது நடந்த விஷயம் ஞாபகம் இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் தவிக்க அப்போது சண்முக வாத்தியார் அங்கு வந்து சௌந்தர்யா அம்மா மேல தான் இருக்காங்க ரவுண்ட்ஸ் போறதுக்கு முன்னாடி அங்க போய் பாக்காம இங்க நின்னு என்ன பேச்சு வேண்டி கிடக்கு என திட்டி அனுப்புகிறார்.

மறுபக்கம் பாரதி ஸ்கூலுக்கு வர சௌந்தர்யா இங்க எதுக்கு வந்த என கேட்க என்னம்மா நீங்கதான் ஸ்கூலுக்கு வந்து எல்லாத்தையும் பாத்துக்கணும்னு சொன்னீங்க இப்போ ஸ்கூலுக்கு வந்தா எதுக்கு வந்தனு கேக்குறீங்க? எனக்கு இங்க டைரக்டர் ரூம்னு ஒன்னு இருக்கு நான் அந்த ரூமுக்கு போகவா? வேண்டாமா? என கேட்க சௌந்தர்யா போக சொல்கிறார்.

அதன் பிறகு மது, கண்ணம்மா இருவரும் சௌந்தர்யா ரூம் அருகே செல்ல அங்கு சௌந்தர்யா பாரதியை நினைத்து வருத்தப்பட்டு கண்கலங்கி இருக்க இதை பார்க்கும் கண்ணம்மா தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என வருத்தப்படுகிறார். பிறகு சௌந்தர்யாவை சந்திக்க சௌந்தர்யா ஹெட் மாஸ்டரை சந்திக்க சொல்ல அப்போது வெளியே வரும் கண்ணம்மா பாரதிய நினைத்து சௌந்தர்யா மேடம் ரொம்ப வருத்தப்படுறாங்க, பாரதியை திருத்த நான் முயற்சி செய்யப் போறேன் என கண்ணம்மா மதுவிடம் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.