சௌந்தர்யாவை ஏமாற்றி விஜய் செக்கில் கையெழுத்து வாங்குகிறான்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா தமிழ் முடித்துவிட்டு தன்னுடைய அக்கா சாந்தியிடம் நீயே சமைத்ததாக சொல்லி அப்பாவை சாப்பிட வைத்துவிடு என சொல்ல அதன் பிறகு சாந்தி அப்பாவையும் தம்பி அகிலையும் கூப்பிட்டு சாப்பிட வைக்கிறார்.

பிறகு கண்ணம்மா எனக்கு 23 ஆயிரம் சம்பளம் தரதா சொல்லி இருக்காங்க உங்களுடைய சம்பளத்தில் வீட்டு செலவுகள் பார்த்துக் கொண்டாலும் என்னுடைய சம்பளத்தை அப்படியே சேமித்து வைத்துவிடலாம். கூடிய சீக்கிரம் எல்லா கடனையும் அடைத்து விட்டு அக்காவுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம். அகிலை நல்லபடியா படிக்க வைக்கலாம் என கூறுகிறார்.

சண்முக வாத்தியார் சாப்பிடும்போது எதுக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க என சொல்லி சாப்பிடுகிறார். அதன் பிறகு சாந்தி கண்ணம்மாவை தினமும் நீங்களே கூட்டிட்டு போயிட்டு வந்துடுங்க என சொல்ல அதெல்லாம் எதிர்பார்த்துகிட்டு இருக்காத, சைக்கிள் இருக்குல்ல அவளை எடுத்துக்கிட்டு வர சொல்லு என கூறுகிறார்.

மறுபக்கம் சௌந்தர்யா தன்னுடைய கணவரின் போட்டோ முன்பு நின்று பாரதிக்கு நல்ல இடத்தில் பொன்ன அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்க அங்கு வரும் விஜய் ஷர்மிளாவின் தூண்டுதலின் படி 6 லட்சத்திற்கான செக்கில் கையெழுத்து வாங்கி அதை 10 லட்சமாக மாற்றுகிறான்.

பிறகு ஷர்மிளாவின் கணவர் வந்து விஜயிடம் செக்கை கொடுக்க சொல்ல இருவரும் அதிர்ச்சியடைய பிறகு ஒரு வழியாக அவரை சமாளித்து விஜய் அங்கிருந்து கிளம்புகிறான். அதன் பிறகு கண்ணம்மா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராக இருக்க அங்கு வரும் மது கண்ணம்மாவுக்கு வாழ்த்து சொல்கிறார். பிறகு கண்ணம்மா ஸ்கூலுக்கு கிளம்ப மது நானே உன்னை விட்டு விடுகிறேன் என சொல்லி அழைக்கிறார்.

அந்த நேரத்தில் கண்ணம்மா சர்டிபிகேட் எதுவும் இல்லாமல் கிளம்ப மது என்ன கை வீசிக்கிட்டு போற என்னுடைய சர்டிபிகேட் எடுத்துட்டு வா என சொல்ல கண்ணம்மா இறந்து போன கண்ணம்மாவின் சர்டிபிகேட் எடுத்துக்கொண்டு வந்து காட்ட மது மற்றும் சாந்தி இருவரும் கண்ணம்மாவின் மார்க்கை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

பிறகு அதில் கண்ணம்மாவின் ஐடி கார்டு ஏதாவது இருந்தால் மாட்டிக்குவேன் என பயந்து அவர்களிடமிருந்து சர்டிபிகேட்டை வாங்கிக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.