வெண்பாவை பளாரென அறைந்துள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மது கண்ணம்மாவை மேலே அழைத்துச் சென்று பாரதியுடன் ஒன்றாக மெட்ராஸ் போயிட்டு வந்த என்னவெல்லாம் நடந்துச்சு உங்களுக்குள்ள ஒரு ரிலேஷன்ஷிப் உருவாகி இருக்கும், என்ன நடந்துச்சு சொல்லு என கேள்வி மேல் கேள்வி கேட்க கண்ணம்மா சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறார்.

இந்த நேரத்தில் அங்கு வரும் சாந்தி என்ன ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசிட்டு இருந்தீங்க, நான் வந்ததும் நிறுத்திட்டீங்க என கேட்டு என்ன மது அந்த விஷயமா? வெண்பா அடிச்சது பற்றி சொல்றியா என கேட்க மது அதிர்ச்சி ஆகிறாள். கண்ணம்மா நடந்த விஷயத்தை கேட்டு மதுவை அழைத்துக் கொண்டு வெண்பாவை பார்க்க கிளம்புகிறார்.

இருவரும் வண்டியில் சென்று எதிரே காரில் வரும் வெண்பாவை வழிமறிக்க மது வேண்டாம் என சொல்ல கண்ணம்மா நீ அமைதியா இரு என சொல்லி பேச காரிலிருந்து இறங்கி வரும் வெண்பா எங்க ஸ்கூல்ல வேல பாத்து எங்ககிட்ட சம்பளம் வாங்குற நீ என்னை டீ போட்டு பேசுவியா? என கன்னத்தில் அறைய கை ஓங்க கண்ணம்மா முறைத்து பார்த்ததும் அப்படியே நிறுத்துகிறார் வெண்பா.

பிறகு மது டீ போட்டு பேசுனதுல உனக்கு என்ன பிரச்சனை நீ வெளிநாடு போயிட்டு படிச்சிட்டு வந்துட்டா எல்லாம் மாறிடுமா? உன் கூட படிச்சவங்க எல்லாரும் உங்களுக்கு அடிமை ஆய்டுவாங்களா என்று கேட்டு வெண்பாவை பளார் என அறைகிறார்.

வெண்பா மீண்டும் கண்ணம்மாவை அறைய போக அங்கு வரும் பாரதி வெண்பாவை திட்டி தடுத்து நிறுத்துகிறார். கண்ணம்மா செய்ததில் என்ன தவறு இருக்கு? நீ மதுவை அடிச்சது தப்பு மது நம்ம வீட்ல ஒத்தாசையா இருக்கான்றதால அவள வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது நாம எல்லாரும் ஒண்ணா படிச்சவங்க ஒரே கிளாஸ்மேட், இந்த பிரச்சனையை இதோட நிறுத்திக்க என எச்சரிக்கிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த வெண்பா ஷர்மிளா, விஜய் மற்றும் தன்னுடைய அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவர் பிரச்சனைக்கு மூல காரணம் நீ மதுவை அடித்தது தான் இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடு என சொல்லி அங்கிருந்து கிளம்ப ஷர்மிளா இதை இப்படியே விடக்கூடாது கண்ணம்மாவுக்கு எங்கடிச்சா எப்படி வலிக்குமோ அப்படி அடிக்கணும் என ஏத்தி விடுகிறார். அதோடு வெண்பா மற்றும் விஜய் கண்ணம்மாவை பழி தீர்க்க ஒரு திட்டத்துடன் ஸ்கூலுக்கு வருகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கண்ணம்மா குடிக்கும் தண்ணீரில் மயக்க மருந்து கலந்து வைத்து விட கண்ணம்மா கிளாஸ் ரூமில் மயங்கி விட அந்த நேரத்தில் பிள்ளைகள் சண்டை போட்டு இரத்த காயம் ஏற்பட கண்ணம்மா பிரச்சனையில் சிக்கும் சூழ்நிலை உருவாகிறது.