
கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளான் பாரதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதி யார் இந்த வேலையை செஞ்சது என புலம்பிக் கொண்டு வர விஜய் நாம தண்ணி பாட்டில் வாங்க இறங்கும்போதுதான் இது நடந்திருக்கும் என சொல்கிறார்.

அதன் பிறகு பாரதி வண்டியை அந்த இடத்துக்கு விடு என சொல்லி கிளம்பிச் செல்ல இந்த பக்கம் கண்ணம்மா பாரதிக்கு போன் போட்டு அந்த ரெண்டு பேர் இன்னைக்கும் என்கிட்ட பிரச்சினை பண்ணாங்க, நீ உடனே வா என கூப்பிட பாரதி நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன் நாளைக்கு பார்க்கலாம் என சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க கண்ணம்மா தான் இந்த வேலையை செய்தார் என தெரியவர விஜய் போலீசில் சொல்லிவிடலாம் என இருவரும் ஸ்டேஷனுக்கு கிளம்பிச் செல்ல அப்போது வழியில் கண்ணம்மாவை பார்க்க பாரதி உன்னால என் கல்யாணமே நின்னு போச்சு என சத்தம் போடுகிறார்.

கண்ணம்மா உனக்கு இதெல்லாம் தேவை தான் உன்னை சும்மாவே விட கூடாது, எனக்கும் ஆள் இருக்கு என சொல்லி அவன் பேர் பாரதி, அன்னவாசல் பாரதி என சொல்ல பாரதி அதிர்ச்சியாகி அமைதியாக என்ன உன் முகத்துல பயம் தெரியுது என கண்ணம்மா நக்கலாக பேசி பாரதிக்கு போன் போட பாரதியின் போன் அடிக்க இது உன் நம்பரா என கேட்கிறான்.
பிறகு நீ தான் அந்த கண்ணம்மா வா என கேட்க நீதான் அந்த பாரதியா என கண்ணம்மா திருப்பி கேட்க இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு கண்ணம்மா பாரதியிடம் மன்னிப்பு கேட்க என் முகத்திலேயே முழிக்காத உனக்கு போய் உதவி பண்ணனும்னு நினைச்சேன் பாரு என பாரதி திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு சௌந்தர்யா வீட்டில் யார் இப்படி ஒரு வேலையை செய்தது என புலம்பிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் பாரதி நடந்த விஷயங்களை சொல்ல உடனடியாக அந்த கண்ணம்மாவை நான் பார்க்கணும் நாளைக்கு சண்முகம் வாத்தியாரை அவளை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சொல்லு என சொல்கிறார்.
பிறகு விஷயம் சண்முக வாத்தியாருக்கு செல்ல அவர் கண்ணம்மா வந்ததும் உன்னால பிரச்சனை தான் சின்ன வயசுல கொலை பண்ணிட்டு ஓடிப்போன இப்ப வந்து எல்லாருடைய நிம்மதியும் கெடுத்துட்டு இருக்க நீ எதுக்கு தான் வந்தியோ என திட்டி அடிக்க கை ஓங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.