கண்ணம்மாவுக்கு கத்தி குத்து விழ பாரதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் ஜெயிலரம்மாவின் கணவரை சந்திக்க ஆபீஸில் காத்துக் கொண்டிருக்க வெகுமாறு ஆனதால் உட்கார முடியாமல் பாரதி தம்மடிக்க செல்கிறார்.

இந்த நேரத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவை உள்ளே ஆபிஸர் அழைக்க பிறகு கண்ணம்மா பாரதி அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர் கேட்கும் கேள்விகளுக்கு பாரதி பதில் தெரியாமல் முழிக்க கண்ணம்மா டக்கு டக்குனு பதில் சொல்லி ஹாஸ்டலுக்கு அப்ரூவல் வாங்குகிறாள்.

அடுத்து வெளியே வரும் பாரதி சௌந்தர்யாவிடம் போன் போட்டு எல்லா கேள்விகளுக்கும் நானே பதில் சொல்லி அப்ரூவல் வாங்கி விட்டதாக சீன் போட அங்கே வரும் கண்ணம்மாவை பார்த்து எல்லாம் எனக்கு தெரியும் நீ சொல்லுவேன் நான் அமைதியாக இருந்தேன் என சமாளிக்க பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்யும்போது ரவுடிகள் கண்ணம்மாவை சுற்றி வளைக்கின்றனர்.

பாரதி ரவுடிகளுடன் சண்டை போட்டு அவர்களை அடித்து துவம்சம் செய்ய கண்ணம்மாவுக்கு கத்தி குத்து ஏற்படுகிறது. பிறகு கண்ணம்மா மருத்துவமனையில் இருக்க அங்கு வரும் ஜெயிலர் மேடம் நலம் விசாரிக்க பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்த ஜெயில்லர் மேடம் ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு எவ்வளவு கோபம் அந்த கோவத்துல உங்களுக்குள்ள இருக்க கேரிங் மற்றும் காதல் தெரிகிறது என சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.