
ரவுடிகள் கண்ணம்மாவை கொல்ல வர பாரதி அவளை காப்பாற்ற முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரவுடி ஒருவர் கண்ணம்மாவை கத்தியால் குத்த வர கண்ணம்மா அவனைத் தடுத்து அவனிடம் போராடுகிறார்.

இந்த நேரத்தில் காரில் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பாரதி திடீரென போனில் சார்ஜ் இல்லாமல் போக காரில் சார்ஜ் இல்லாத காரணத்தினால் ரூமுக்கு எழுந்து வருகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா ரவுடியுடன் சண்டை போட்டு அவனை பிடித்து வெளியே தள்ள அங்கு வரும் பாரதி ரவுடியை அடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து அவனை பிடித்து கொடுக்கிறார்.
பிறகு ரூமுக்கு வரும் பாரதி யார் காலிங் பெல் அடித்தாலும் யார் என்ன என்று கேட்டு தொறக்க மாட்டியா? படிச்சிருக்க இந்த அறிவு கூட இல்லையா என திட்டுகிறார். நீ போன கொஞ்ச நேரத்திலேயே காலிங் பெல் அடிச்சது, நீயா தான் இருக்கும் என திறந்தேன் என கண்ணம்மா சொல்ல பாரதி சரி கதவை நல்லா சாத்திக்கிட்டு படுத்து தூங்கு காலையில வரேன்னு சொல்லி சார்ஜரை எடுத்துக்கொண்டு கிளம்ப கண்ணம்மா இங்கேயே இரு பாரதி என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
அதன் பிறகு கண்ணம்மா படுத்துக் கொள்ள திடீரென ரவுடி உள்ளே வந்து தன்னை கத்தியால் குத்துவது போல கனவு கண்டு அலறி எழுந்து பார்க்க வெளியில் யாரோ நடமாடுவது போல இருப்பதால் பாரதிக்கு போன் போட அவனது போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. பிறகு கண்ணம்மா ரவுடிகள் திரும்ப வந்துட்டாங்களா என சந்தேகத்துடன் லென்ஸ் வழியாக பார்க்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

அதன் பிறகு கண்ணம்மா கதவை திறந்து பார்க்க கையில் இரும்பு கம்பியுடன் பாரதி ரூமுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எதுக்கு கதவை திறந்த என்ன ஆச்சு போய் படுத்து நன்றாக தூங்கு என்னை தாண்டி எவனும் வரமாட்டான் என சொல்லி கண்ணம்மாவை படுத்து தூங்க சொல்கிறார் பாரதி.
பாரதி இவ்வளவு நல்லவனா இருக்கானே இது தெரியாம ரொம்ப காயப்படுத்தி விட்டேன் என கண்ணம்மா வருத்தப்பட்டு உள்ளே சென்று படுத்து தூங்கி மறுநாள் காலையில் எழுந்து பார்க்க பாரதி அதே இடத்தில் உட்கார்ந்து அப்படியே தூங்குகிறார். பிறகு கண்ணம்மா குளிச்சு முடித்துவிட்டு பாரதியை எழுப்ப வர பாரதி உன்னுடைய பாத் ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா என கேட்டு குளிக்கப் போகிறார்.

டிரஸ் ஜட்டி பனியன் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போகும் பாரதி டவலை மற்றும் மறந்துவிட பாரதி என்ன செய்வது என தெரியாமல் பாத்ரூமில் இருந்து தவிக்க கண்ணம்மா டவல் எடுத்து போகாததை பார்த்து டவலை எடுத்துச் சென்று கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.