
கண்ணம்மாவை ரவுடிகள் கொல்ல வந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு பாரதியின் கண்ணம்மாவும் பேச்சில் விளையாடி முடித்துவிட்டு வந்து உட்கார அப்போது பூமிக்கும் பாட்டி வந்து பூ வாங்கி வைத்துவிடு என பாரதியிடம் சொல்ல நாங்கள் காதலர்கள் கிடையாது என சொல்கின்றனர்.

இந்த நேரத்தில் அங்கு வரும் ரவுடிகள் சித்ராவை கொல்வதற்கு பதிலாக கண்ணம்மாவை மாற்றிக் கொன்ற நிலையில் சித்ராவாக வாழ்ந்து வரும் கண்ணம்மாவை கொல்ல திட்டமிடுகின்றனர். ரவுடியை பார்த்ததும் கண்ணம்மா பாரதி அங்கிருந்து அழைத்துச் சென்று வருகிறார்.
மறுபக்கம் ஷர்மிளா விஜயிடம் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சென்னையில் சென்று தங்கியிருக்கிறார்கள் எனக்கு பயமா இருக்கு என சொல்ல விஜய் அவங்க ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது நீ பயப்படாத என சொல்கிறார். அடுத்து ஒவ்வொரு ஹோட்டலாக தேட ரூம் இல்லாமல் இருக்க கடைசியில் ஒரே ஒரு ஹோட்டலில் ஒரே ஒரு டபுள் பெட்ரூம் மட்டுமே இருப்பதாக சொல்கின்றனர்.

கண்ணம்மா தனித்தனியான ரூம் வேண்டும் என அடம் பிடிக்க பாரதி வேறு வழி இல்லை இன்னமும் அலைய முடியாது என சொல்லி அந்த ரூமை புக் செய்து ரூமில் கண்ணம்மாவை படுத்து தூங்க சொல்லிவிட்டு பாரதி ஜீப்பில் படுத்து தூங்க வருகிறார். பாரதி தன்னை ரூமில் தூங்க சொல்லிவிட்டு ஜீப்பில் படுக்கப் போனதை பார்த்து காதல் பார்வையோடு பார்க்கிறார் கண்ணம்மா.
அடுத்து கண்ணம்மா தன்னுடைய அக்கா சாந்திக்கு போன் போட்டு ஹோட்டல் நடந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் விஜய் பாரதியிடம் சென்னையில் தங்கியிருப்பது பற்றி பேசுகிறார். கண்ணம்மாவை பார்த்தாலே எரிச்சலா இருக்கு என சொல்ல அதை கேட்ட ஷர்மிளா சந்தோஷப்படுகிறார்.

இந்த நேரத்தில் ரவுடிகள் வந்து ஹோட்டலில் காலிங் பெல் அடிக்க கண்ணம்மா கதவை திறக்க கத்தியுடன் நிற்கும் ரவுடிகள் அன்னைக்கு தப்பிச்சிட்ட இன்னைக்கு தப்பிக்க முடியாது என பேசுகின்றனர். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறாள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.