
பாரதியை வெண்பா நிராகரிக்க ஜெயிலரிடம் சிக்கி உள்ளார் கண்ணம்மா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வெளிநாட்டிலிருந்து வெண்பா ஊருக்கு வந்த நிலையில் ஷர்மிளா பாரதி கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்ல வெண்பா அதுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

மறுபக்கம் பாரதியும் கண்ணம்மாவும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண்மணி லிப்ட் கேட்க கண்ணம்மா வண்டியை நிறுத்தாம போ என சொல்ல பாரதி வண்டியை நிறுத்தி அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து கண்ணம்மாவை வெறுப்பேற்றுவதற்காக ஓவராக ஜொல்லு விட்டு பேசி வருகிறார்.

அடுத்ததாக அந்த பெண் இறங்கும் இடம் வந்து விட்டதாக சொல்லி இறங்குகிறாள். அப்போது அங்கு ஒருவர் வர இவர் தான் தன்னுடைய கணவர் என சொல்லி பாரதிக்கு அறிமுகம் செய்து நன்றி அண்ணா என சொல்ல பாரதி ஷாக்காக கண்ணம்மா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதனால் பாரதி வசமாக இவ கிட்ட மாட்டிக்கிட்டேன் என புலம்பிக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டு பார்க்க வேண்டியவரின் வீட்டிற்கு வருகிறார்.
பிறகுதான் தெரிகிறது அது ஜெயிலர் அம்மாவின் வீடு என்பது. போலீஸ் வேனை பார்த்ததும் அஞ்சி நடுங்கும் கண்ணம்மா வார்டன் ஒருவர் வெளியே வர அவரை பார்த்து மறைந்து கொள்கிறார். அவர்கள் சென்றதும் பிறகு பாரதியும் கண்ணம்மாவும் காலிங் பெல் அடிக்க ஜெயிலர் மேடம் வெளியே வருகிறார்.

அப்போது கண்ணம்மா பாரதியின் பின்புறம் மறைந்து கொள்ள பிறகு பாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு கண்ணம்மாவை தேட கண்ணம்மா வெளியே வந்து விஷயத்தை எதுவும் சொல்லி விடாதீர்கள் என சைகையில் கை காட்ட ஜெயிலர் மேடம் எந்த விஷயத்தையும் சொல்லாமல் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்து பேசுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.