சௌந்தர்யா எடுத்த முடிவால் பாரதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் வெண்பா மற்றும் விஜய் இருவரும் அவரை ரூமில் படுக்க வைத்து வெண்பா நல்லவள் போல் நாடகமாட சௌந்தர்யா உள்ளே வந்து இனி பாரதி என் பிள்ளையே கிடையாது அவனை நான் தலை மூழ்கிட்டேன் இனி அவன் என் முகத்தில் முழிக்கவே கூடாது என சொல்கிறார்.

மறுநாள் காலையில் பாரதி எழுந்து நேற்று என்ன நடந்தது என தெரியவில்லை என குழம்பி போய் சௌந்தர்யாவிடம் போய் பேச சௌந்தர்யா கோபப்பட்டு இனிமே என் முகத்தில் முழிக்காத என சொல்லி விட்டு வெளியே செல்கிறார். பிறகு வெண்பா முதலில் அத்தையை சமாதானம் செய்ய வேண்டும் என சொல்லி நீ சாப்பாடு கொண்டு போய் கொடு என சொல்லி கொடுக்க பாரதி எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வருகிறார்.

ஸ்கூலில் சௌந்தர்யா பாரதியிடம் கோபப்பட இதை பார்த்த கண்ணம்மா பாரதி வெளியே வந்த பிறகு நடந்த விஷயத்தை கேட்க அவன் அனைத்தையும் சொல்கிறான். உன்னால குடியை விட முடியாதா என கேட்க அப்பாவோட ஞாபகத்தால் குடியை விட முடியவில்லை என சொல்கிறான்.

அதற்கு அடுத்ததாக ஸ்கூலில் பாரதியின் அப்பா குறித்த ஒரு சர்டிபிகேட்டை தேடி கொடுக்க சொல்லி கண்ணம்மாவிடம் சொல்ல கண்ணம்மா அதை தேடும் போது அதில் அவரைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு முறை அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடியோவை பாரதியிடம் போட்டு காட்டினால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக மதுவிடம் சொல்லி கண்ணம்மா அந்த ஆடியோ கேசட்டை வாங்க முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.