கண்ணம்மாவுடன் சென்னை கிளம்பிய பாரதியின் மானத்தை வாங்கியுள்ளார் சௌந்தர்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஸ்கூலில் இருக்கும் போது செல்வம் வந்து உடனடியாக ஹாஸ்டலுக்கு திரும்பவும் அப்ரூவல் வாங்க வேண்டும், இன்னும் இரண்டு நாட்கள் தான் டைம் இருக்கு என சொல்ல சௌந்தர்யா தனக்கு தெரிந்த அதிகாரியிடம் பேச அவர் சென்னை வந்து பார்க்க சொல்கிறார்.

இதனால் சௌந்தர்யா பாரதியை சென்னைக்கு போக சொல்ல பாரதியும் சம்மதிக்க ஹாஸ்டல் வார்டனாக கண்ணம்மாவை கூட போயிட்டு வர சொல்ல அப்பா இதுக்கெல்லாம் சம்மதம் தர மாட்டார் என கண்ணம்மா சொல்கிறார்.

அடுத்து சௌந்தர்யா ஷண்முக வாத்தியாரை அழைத்து பேச அவர் சரி என ஓகே சொல்ல சௌந்தர்யா பாரதி, கண்ணம்மா மற்றும் மது என மூவரையும் போயிட்டு வர சொல்ல மூவரும் கிளம்ப ஷர்மிளா பாரதி, கண்ணம்மா ஒன்றாக போவதை தடுக்க முயற்சி செய்ய முடியாமல் போகிறது.

அடுத்து மது தனக்கு வயிறு வலிக்கிறது என நைசாக கழண்டு கொள்ள பாரதி கண்ணம்மா மட்டும் கிளம்ப செல்கிறார்கள். பாரதி மாஸான பாடல்களை போட கண்ணம்மா கலாய்க்கும் வகையில் பாடல்களை போட இருவரும் போட்டி போட்டு பாடல்களை மாற்றி கடைசியில் போதும் என நிறுத்தி கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் சௌந்தர்யா போன் போட்டு ஜட்டி பனியனை வீட்டில் விட்டு போனதை பற்றி பேசி நக்கல் அடிக்க கண்ணம்மா இதை கேட்டு சிரிக்க பாரதி மானம் போய் விட்டதாக புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.