பாரதி கண்ணம்மாவுக்கே பதில் தெரியல இதுல புதிய சீரியல் ப்ரோமோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Bharathi Dasan Colony Serial in Vijay Tv : சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ஆரம்ப கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தன.

பாரதி கண்ணம்மாவுக்கே பதில் தெரியல.. இதுல இன்னொன்னா?? விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் போதும் புதிய சீரியல் - சூப்பராக வெளியான ப்ரோமோ

அப்படி மக்களை வெகுவாக கவர்ந்த சீரியலில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆனால் தற்போது இந்த சீரியல் ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு செல்வதால் ரசிகர்கள் மத்தியில் போரடிக்க தொடங்கிவிட்டது.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கோபி சிக்காமல் தொடர்ந்து தப்பித்து வருவது சீரியல் மீதான சலிப்பை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் அடுத்து புதியதாக பாரதிதாசன் காலனி என்ற பெயரில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவாக இருப்பதாக இதேபோல் சீரியலும் பாசிட்டிவ் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மாவுக்கே பதில் தெரியல.. இதுல இன்னொன்னா?? விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் போதும் புதிய சீரியல் - சூப்பராக வெளியான ப்ரோமோ

ஆனாலும் சிலர் பாரதி கண்ணம்மாவிற்கே இன்னும் பதில் தெரியல இதுல பாரதிதாசன் காலனி வரையா எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.