பாக்கியா உடன் கோபி நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கோபி பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய நிலையில் மனம் வந்த பாக்கியா தானாக சென்று விவாகரத்து கொடுத்து தற்போது கோபியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ஆசை ஆசையாக ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்த கோபி ஏன்டா கட்டிக்கிட்டோம் என ராதிகாவின் டார்ச்சர் தங்காமல் தினம் தினம் புலம்பி வருகிறார்.

எதற்கெடுத்தாலும் கோபம் சண்டை அடி உதை என கோபியை படாத பாடுபடுத்தி வருகிறார் ராதிகா. இந்த நிலையில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா சூட்டிங் ஸ்பாட்டில் கோபியாக நடித்து வரும் சதீஷ் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கோபி என்னயா இதெல்லாம்? இத மட்டும் ராதிகா பார்த்தா உங்க கதை என்ன ஆகிறது என கலாய்த்து வருகின்றனர்.