Bhagyaraj Cinema Career Secrets
Bhagyaraj Cinema Career Secrets

39 வருட திரைப்பயணத்தில் பாக்கியராஜ் ஒருமுறைகூட நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தராதது ஏன் என நடிகர் பேசியுள்ளார்.

Bhagyaraj Cinema Career Secrets : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பாக்கியராஜ். திரைக்கதையும் ஜாம்பவான்கள் பலரும் கொண்டாடி வரும் ஒருவராக இருந்து வருகிறார்.

இவர் திரையுலகில் அறிமுகமாகி 39 வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இறுதியாக தன்னுடைய மகனை வைத்து சித்து பிளஸ் 2 என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படம் தோல்வியை தழுவியது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் 39 வருட திரைப்பயணத்தில் பாக்கியராஜ் தன்னுடைய ஒரு படத்தில் கூட நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தரவில்லை.

சிவகார்த்திகேயனிடம் சிபாரிசு செய்ய இலங்கை இளைஞரிடம் ஒரு லட்சம் கேட்ட மீரா மிதுன்?? பரபரப்பைக் கிளப்பிய இலங்கை பத்திரிகையின் செய்தி!

தற்போது இதற்கான காரணம் என்ன என பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்கள் தன்னுடைய வீட்டு பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது நடிகர் வடிவேலு வளர்ந்து வந்த காலத்தில் இயக்குனர் பாக்யராஜ் தன்னுடைய படங்களில் தொடர்ந்து சொதப்பி தோல்விகளை கொடுத்து வந்தார்.

இது கூட அவர் நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தராமல் இருக்க காரணமாக இருக்கலாம் என சித்ரா லட்சுமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் தற்போது எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இறுதியாக இவர் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான பொன் மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.