Bhagyalakshmi Serial Jeni Marriage

நடிகருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் நடைபெறாமல் நின்று போயுள்ளது.

Bhagyalakshmi Serial Jeni Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

பாக்கியலட்சுமி மூத்த மகன் செழியனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்து இருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கும் நடிகர் ஆர்கே சுரேஷ்க்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆனால் சில காரணங்களால் இவர்களின் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதனையடுத்து திவ்யா கணேஷ் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதைப்போல் ஆர்கே சுரேஷ் பைனான்சியர் மது என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.