Bhagyalakshmi Serial Episode Update 15.09.21

ஜெனி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் கோபி.

Bhagyalakshmi Serial Episode Update 15.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்ததையடுத்து பாக்கியாவும் செழியனும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜெனியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். ‌‌

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஜெனியிடம் இனியா பாப்பா எப்போ பிறக்கும் பாப்பாவுக்கு நான் என்ன வேண்டும் என கேட்க அத்தை என கூறினர். அதன் பின்னர் ஜெனியின் அப்பா அம்மா வந்து வாழ்த்தி விட்டு சென்றனர்.

எழில் அமிர்தா ஊரில் இருந்து வந்ததை அடுத்து அவரை பார்க்க வீட்டிற்கு சென்றார். அங்கே ஊரில் இருந்து வாங்கி வந்த ஸ்நாக்ஸ்களை கொடுத்து அனுப்பினார்கள். அதேசமயம் கார் செலவுக்காக எழில் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டனர்.

கவினின் Lift படத்திற்கு என்ன பிரச்சனை? – Producer Ravindran அறிக்கை! | Kavin, Amritha Aiyer | HD

இன்னொருபுறம் கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று மய்யூ கேட்ட சிக்கன் லாலிபாப் மற்றும் பிரியாணி வாங்கிக்கொண்டு போய் கொடுத்தார். இந்த வாரம் பீச்சுக்குப் போய் ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என கூற மய்யூவும் ஓகே என கூறினார். இன்னொருபுறம் ஜெனி செழியனிடம் என்னிடம் என் மேல கோவமா இருக்கியா என கேட்கிறார். அதெல்லாம் இல்ல ஆனால் வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கலாம். நாமே இது வேணுமா வேணாமான்னு முடிவெடுத்த பிறகு சொல்லியிருக்கலாம் என கூறுகிறார்.

இதனையடுத்து கோபி வீட்டிற்கு வந்ததும் அவருக்காக காத்துக் கொண்டிருந்த பாக்கியா நீங்க தாத்தாவாக போறீங்க என கூறினார். முதலில் ஒன்றுமே புரியாமல் இருந்த கோபி அதன் பின்னர் ஜெனி கர்ப்பமாக இருப்பதாக பாக்கியா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அதையெல்லாம் மறைத்துக்கொண்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு என வாய் வார்த்தையாக கூறுகிறார் கோபி. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.