பள்ளியில் பாக்கியாவால் இனியாவுக்கு ஷாக் ஒன்று காத்திருந்தது‌.

Bhagyalakshmi Serial Episode Update 09.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியாவின் பள்ளி விழாவிற்குச் சென்று உள்ள பாக்கியா முதல் போட்டியில் சமையல் செய்தார். ஒரு வழியாக இந்த ரவுண்டில் அவர் தேர்வானார்.

அதாவது தோல்விக்கு, என்ன காரணம்னா.. : ஜோ ரூட் புலம்பல்

இதனை அடுத்து இரண்டாவது ரவுண்டில் என்ன செய்யப் போகிறீர்கள் என ரேகா கேட்க முதலில் தயங்கிய பாக்கியா பின்னர் டான்ஸ் ஆடப் போகிறேன் என கூறினார். அதன் பின்னர் யாரும் எதிர்பாராத அளவிற்கு சூப்பராக டான்ஸ் ஆடி 2-வது சுற்றில் தேர்வானார். பாக்யாவின் நடனத்தை பார்த்து ஒரு நிமிஷம் ஆடி போனார் இனியா.

மூன்றாவது சுற்றில் பாக்கியாவிடம் ரேகா ஒரு சிறந்த அம்மா என்றால் எப்படி இருக்க வேண்டும். இவங்க தான் சிறந்த அம்மா அவங்க தான் சிறந்த அம்மா என எளிதாக சொல்லிவிட முடியாது‌ என தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தன்னுடைய வீட்டில் வேலை பார்க்கும் செல்வி வாழ்க்கையில் நடந்ததை பற்றியும் பேசுகிறார். அம்மாக்கள் குறித்து மிக உயர்வாகப் பேசி இரண்டாவது சுற்றில் தேர்வாகிறார்.

நல்ல உணவை சாப்பிட்டால் நோயை வெல்லலாம் – Bigg Boss Aari வேண்டுகோள்..! | Chef Damu | Erode Mahesh | HD

இனியா உடனே மேடைக்கு வந்து நீதான் ஜெயிப்பேன் என்று நினைக்கிறேன் என கூறுகிறார். முதலில் என்னை திட்டிய நீ இப்போது ஜெயிப்பேன் என்று சொன்னதே நான் ஜெயித்ததற்கு சமம் என கூறுகிறார் பாக்கியா.

நடுவர்களின் கலந்து ஆலோசித்து வெற்றியாளர் யார் என்பதை தெரிவு செய்கின்றனர். வெற்றியாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே இன்றைய எபிசோட் முடிவடைகிறது.