பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான இரண்டாவது காரணத்தை ராதிகா கூற உள்ளார்.

Bhaghyalakshmi Jenifer Reveals Quite Secrets : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.

ஒலிம்பிக் போட்டி : குதிரையேற்றம்-கோல்ப் அணியில், இந்திய வீரர்கள் விவரம்

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது பிக்பாஸ் ரேஷ்மா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வேறொரு கோணத்திற்கு செல்லும் விஜய்யின் மேல்முறையீடு – ஓரிரு நாட்களில் தீர்ப்பு | Thalapathy VIjay

மேலும் இந்த சீரியலில் இருந்து விலக காரணம் என்ன என ஜெனிஃபர் ஏற்கனவே வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தார். அந்த வீடியோவில் இரண்டு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சீரியலின் கதைக்களம் மாறப்போகிறது. இனி என்னுடைய கதாபாத்திரம் நெகட்டிவ் வேடமாக உள்ளது. நல்ல பெயர் எடுத்து விட்டு நெகட்டிவ் வேடத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியிருந்தார்.

மேலும் இன்னொரு செய்தி சந்தோஷமான விஷயம் அதை விரைவில் அறிவிப்பேன் என கூறினார். அது என்ன என்பதை இன்று மாலை 6 மணிக்கு வீடியோ மூலம் தெரியப்படுத்த உள்ளார். அது என்ன விஷயம் என்பது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதாவது ஜெனிபர் கர்ப்பமாக உள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து அவர் விலகிக்கொள்ள மிக முக்கியமான இரண்டாவது காரணம் இதுதானாம். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.