Betel Uses

Betel Uses : ஒவ்வொரு சுப விழாக்களிலும் வெற்றிலை தாம்பூலம் தருவார்கள். அது ஏன் என்று தெரியுமா? நாம் சுபநிகழ்ச்சிகளில் உண்ட உணவு எளிதில் ஜீரணம் அடையவே தாம்பூலத்தை தருகின்றனர்.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள் :

வெற்றிலையில் நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அனேக சக்திகள் உள்ளன. கால்சியம் ,இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து என நிறைய நிறைந்துள்ளன.

வெற்றிலையால் தீரும் நோய்கள் :

1. வெற்றிலை கோழையை குறைக்கிறது.

2 இருமல்,சளிஆஸ்துமா ,மூச்சுக்குழல் அலர்ஜி ஆகியவற்றை வெற்றிலை குணப்படுத்துகிறது.

3. வெற்றிலை ,பாக்கு ,சுண்ணாம்பு இவை அளவோடு எடுத்து உணவுக்குப்பின் நன்றாக மென்று உண்டால், அஜீரண கோளாறை தவிர்க்கலாம்.

4. உண்ட உணவை எளிதில் ஜீரணமடைய வெற்றிலை மிகவும் பயன்படுகிறது.

5. வெற்றிலையை பயன்படுத்தும்போது காம்பையும்,நரம்பயையும் நீக்குவது அவசியம்.

6. வெற்றிலை வாதத்தைப் போக்கும் .கபத்தை நீக்கும்.

7. வெற்றிலை ஒரு விஷநீக்கியாக பயன்படுகிறது. வெற்றிலையில் 6/8 மிளகையும், உப்பையும் வைத்து மென்று தின்றால் தேள் கடி விஷமும் குணமாகும் .தோல் அலர்ஜியும் நீங்கும்.

8. வெற்றிலையை இளஞ்சூட்டில் வதக்கி சாறு எடுத்து அந்த சாற்றை மூக்கில் இரண்டு துளி விட, தலை பாரம், தலை நீர் தேக்கம், தலைவலி அனைத்தும் குணமாகும்.

9. வெற்றிலையில் சுண்ணாம்பு சத்து நிறைய உள்ளதால் ,எலும்புகளுக்கும் ,பற்களுக்கும் மிகவும் நல்லது.

10. வெற்றிலையை மென்று தின்று வந்தால் ,உமிழ்நீர் சுரப்பியை தூண்டி பலப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here