Best Pair 2019
2019-ல் ரசிகர்களை கவர்ந்த ரீல் / ரியல் ஜோடி யார் என நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

2020 உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக பிறந்தது. கலக்கல் சினிமாவும் 2019-ன் மக்களை கவர்ந்த சிறந்த தருணங்களை / பிரபலங்களை தெரியப்படுத்த சமூக வளையதள பக்கங்களில் ஓட்டெடுப்புகளை நடந்தி வருகிறது.

நேற்றைய ஓட்டெடுப்பில் 2019-ல் உங்கள் மனம் கவர்ந்த ரீல் / ரியல் ஜோடி எது என கேட்கப்பட்டது. ரீல் ஜோடிகளாக விஸ்வாசம் படத்திற்காக அஜித் நயன்தாரா, பிகில் படத்திற்காக விஜய், நயன்தாரா ஆகியோர் இடம் பெற்றனர்.

மேலும் ரியல் ஜோடிகளாக பிக் பாஸ் கவின், லாஸ்லியா இடம் பெற்றனர். ட்விட்டர், ஹலோ, யூ ட்யூப் ஆகிய பக்கங்களில் நடந்த கருத்து கணிப்பு முடிவுகள் இதோ உங்களுக்காக

ட்விட்டர் :

மொத்தம் 4,916 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் அஜித் நயன்தாரா முதலிடம் பிடிக்க, கவின் லாஸ்லியா இரண்டாம் பிடித்துள்ளனர். விஜய், நயன்தாரா ஜோடிக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்துள்ளது.

ஹலோ :

ஹெலோ பக்கத்தில் மொத்தம் 11,800 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் விஜய் நயன்தாரா ஜோடி முதலிடத்தையும், அஜித் நயன்தாரா ஜோடி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கவின், லாஸ்லியா ஜோடி 18% ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது.

யூ ட்யூப் :

மொத்தம் 5,800 ஓட்டுகள் பதிவாக அதில் 50% ஓட்டுகளை விஜய், நயன்தாரா ஜோடி பெற்றுள்ளது. அதன் பின்னர் அஜித், நயன்தாரா ஜோடி 35% ஓட்டுகளை பெற கவின், லாஸ்லியா ஜோடிக்கு 15% ஓட்டுகள் கிடைத்துள்ளது.

மொத்தமாக மூன்று பக்கங்களின் ஓட்டுகளை வைத்து பார்த்தால் மூவருமே ரசிகர்களை கவர்ந்த ஜோடி தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.