Best Pair 2019
2019-ல் உங்களை கவர்ந்த ரீல். ரியல் ஜோடி எது என்ற தலைப்பில் கலக்கல் சினிமாவின் சமூக வளையதள பக்கங்களில் ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

2020 தொடங்க இன்னும் ஒரே நாள் இருக்கும் நிலையில் 2019-ல் சிறந்த விசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள கலக்கல் சினிமா சமூக வளையதள பக்கங்களில் மெகா ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளது.

நேற்று 2019-ல் உங்களை கவர்ந்த படம் எது? என்ற தலைப்பில் பேட்ட, விஸ்வாசம், பிகில், கோமாளி என நான்கு படங்களை வைத்து ஓட்டெடுப்பை நடத்தினோம்.

ஹலோ, ட்விட்டர், யூ ட்யூப் ஆகிய சமூக வளையதளங்களில் நடத்தப்பட்ட இந்த ஓட்டெடுப்பில் மொத்தமாக 10,000-கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகின.

தளபதி விஜயின் பிகில் முதலிடமும் தல அஜித்தின் விஸ்வாசம் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தது. இதனையடுத்து இன்று 2019-ல் உங்களை கவர்ந்த ரீல். ரியல் ஜோடி எது என்ற தலைப்பில் ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

இதில் ரீல் ஜோடிகளாக அஜித், நயன்தாரா ( விஸ்வாசம் ) விஜய், நயன்தாரா ( பிகில் ) மற்றும் ரியல் ஜோடியாக கவின், லாஸ்லியா ( பிக் பாஸ் ) என ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளோம்.

ஓட்டளிக்க விருப்பம் உள்ளவர்கள் ஓட்டளிக்கலாம்.