Best Tamil Movies 2019
2019-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது பிகிலா? விஸ்வாசமா? பேட்டயா? கோமாளியா? என நடத்தப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவு தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் விரல் விட்டு எண்ண கூடிய அளவிலான படங்களே மக்கள் மத்தியில் இடம் பிடிக்கின்றன.

அப்படி இந்த 2019-ல் திரைக்கு வந்த படங்களில் பேட்ட, விஸ்வாசம், பிகில், கோமாளி ஆகிய படங்களில் மக்கள் மனதை கவர்ந்த படம் எது என பிரம்மாண்ட ஓட்டெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

ட்விட்டரில் 9,140 ஓட்டுகளும் ஹலோவில் 8,300 ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. ஓட்டெடுப்பு முடிவில் ட்விட்டரில் வெற்றி பெற்ற நிலவரம்

53.3% ஓட்டுகளுடன் பிகில் முதலிடத்தை பிடித்துள்ளது. 34.7% ஓட்டுகளுடன் விசுவாசம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அதே போல் ஹெலோவில் 56% ஓட்டுகளுடன் பிகில் முதலிடத்தை பிடித்துள்ளது. 33% ஓட்டுகளுடன் விஸ்வாசம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.