சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது சியான்கள் திரைப்படம்.

Best Movie Awards for Chiyaangal Movie : தமிழ் சினிமாவில் கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் கேஎல் கரிகாலன் நடிப்பில் வைகறை பாலன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் சியான்கள்.

1,521 வேட்பாளர்கள் தயார் : களத்தில் இறங்குகிறார் கமல்ஹாசன்

வீட்டில் உள்ள முதியவர்களால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கேஎல் கரிகாலன் அவர்களின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.

ஆயுத பூஜையில் Suriya ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம Treat – கொண்டாட தயாராகுங்கள்.! | Tamil News HD

இந்த நிலையில் தற்போது கனடாவில் நடைபெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதனால் சியான்கள் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் கனடா டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழா குழுவினர் விருதை வென்றுள்ள சியான்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கலக்கல் சினிமாவும் சியான்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான கே எல் கரிகாலன் படத்தை வெற்றி பெறச் செய்த தமிழ் ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.