Best Corona Treatment Hospitals in Tamilnadu
Best Corona Treatment Hospitals in Tamilnadu

கொரானா வைரஸ் தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் தமிழகத்திலிருந்து இரண்டு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Best Corona Treatment Hospitals in Tamilnadu : சீனாவின் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் கிட்டத்தட்ட 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேசமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் தமிழக மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கையும் ஐந்து லட்சத்தை நெருங்கி வருகிறது. 46 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது தமிழகத்தில் சிகிச்சையில் இருந்து.

இந்த கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்காக தமிழகத்தில் இருந்து இரண்டு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவை சென்னையில் உள்ள ஓமந்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி.

சிறந்த கொரானா சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கான விருதை அங்கீகாரம் பெற்ற சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பான CAHO ( Consortium of Accredited Healthcare Organizations ) அறிவித்துள்ளது.

பத்து ரூபாயில் கொரானா சிகிச்சை.. உயிரிழப்பே இல்லாமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரின் அசத்தல் சலுகை

அனைவருக்கும் நன்றி – இது தான் போட்டி – CAHO ஹெல்த்கேர் தொழிலாளி / பணியிட பாதுகாப்பு போட்டி விருது வென்ற அரசு ஓமந்தூர் மருத்துவக் கல்லூரி நேற்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும் பாராட்டு தெரிவித்து தமிழகத்தின் சுகாதாரச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.

ஓமந்தூர் மருத்துவமனை இதுவரை 18,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது.

ICMR-ன் IOH உடன் இணைந்து CAHO அறிவித்த போட்டியில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது டாக்டர்களால் வழங்கப்படும் சிறப்பான சிகிச்சைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றில் இருந்து வெகு விரைவில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் குணமடைந்து இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் தான் காரணம் என பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.