Best Award for N4 Movie

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா ஹீரோயினாக நடித்துள்ள முதல் படத்திற்கு கிடைத்துள்ள விருதால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Best Award for N4 Movie : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா.

டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். வெள்ளித்திரையில் ஐரா படத்தில் அவரது இளம்வயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனையடுத்து தற்போது அறிமுக இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியுள்ள N4 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் கல்கத்தா பிலிம்ஸ் கல்ட் இன்டர்நேஷனல் என்ற இறுதி விழாவில் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்தள்ளது.