கன்னி ராசி, Benefits Of Virgo 2019

Benefits Of Virgo 2019 : 

அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டில் சில காலம் வரை எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும்.

* ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் நலனில் முன்னேற்றமும் சிக்கல்களும் மாறி மாறி ஏற்படக்கூடும்.

* திருமணம்
திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும்.

* குடும்பம்
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் ஆனால் உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது.

பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.

* தொழில்
வேலையிலும் கலவையான பலங்களே கிட்டும். வாய்ப்புகள் பல இருந்தாலும் சிலவற்றில் தோல்வியும் சிலவற்றில் வெற்றியும் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயல்வார்கள் என்ற போதிலும், உங்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வந்து சேரும்.

* அரசியல்
அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

* விவசாயம்
விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.

* மாணவர்கள்
பெற்றோர்கள். தங்களுடைய குழந்தைகளை படிப்பிலும் அதே நேரத்தில் பிற நடவடிக்கைகளிலும் ஈடுபட ஊக்கம் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது மனரீதியாக படிப்பில் விருப்பத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய உந்துதலினால் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். விளையாட்டு அல்லது பொழுதுபோக்குக்கிற்கு பிறகு படிப்பில் ஈடுபடுவதில் கவனமாய் இருங்கள். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here