Benefits of eating groundnut
Benefits of eating groundnut

Benefits of eating groundnut

பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்தானது வேர்க்கடலையா? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!!

🥜 பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது வேர்க்கடலை. வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்.

🥜 வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம்.

🥜 உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்புச்சத்தான HDL போதுமான அளவு கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலையை அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் மாரடைப்பு வராத வண்ணம் பாதுகாப்பு கிடைக்கிறது.

🥜 தினமும் 30 கிராம் அளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் சரியாகிவிடும்.

🥜 ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.

🥜 புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை, தாய்ப்பால் சுரக்க வழி செய்கிறது.

🥜 ஒமேகா 3 உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி வராமல் தடுக்கிறது.

🥜 வேர்க் கடலையில் மிகுந்துள்ள வேதிப்பொருட்களான பாலிபினால்ஸ் மற்றும் ஒலியிக் அமிலம் ஆகியன இதயத்துக்குப் பாதுகாப்பாக மட்டுமின்றி நோய்க்கிருமிகளைத் தடுத்து நிறுத்துவதோடு புற்றுநோய் வராத வண்ணம் பாதுகாக்கிறது.

🥜 வேர்க்கடலையை வைத்து பலதரப்பட்ட தின்பண்டங்களை செய்யலாம். வேர்க்கடலை பர்பி, வேர்க்கடலை உருண்டை, லட்டு, வேர்க்கடலை எண்ணெய் போன்றவற்றை தயாரித்து சாப்பிடலாம். சுவையும் சத்தும் நிறைந்த வேர்க்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here