மகர ராசி பலன்கள் 2019

Benefits of capricorn 2019 :  

மற்றவர்களுடன் அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மாற்றங்களைத் தந்து தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் சில விஷயங்களைப் புரிய வைக்கும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக 2019 நிதானமான பலன்கள் நடக்கும்
ஆண்டாக இருக்கும்.

* நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது. பொருளாதார நெருக்கடி நீங்கும். தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சேருவாரகள்.

* உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

* சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வாழ்க்கைத்துணை உடனான கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

* உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மந்தமான பலன்கள்  நடக்கும். பணவரவு குறையும். ஆகவே எதுவும் புதியதாக ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல.

* எந்த ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்பும், தொழில் தொடங்கும் முன்பும், வேலை மாறும் முன்பும், ஒன்றுக்கு நூறுமுறை நீங்கள் யோசிக்க வேண்டிய வருடம் இது.

* மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம்.

* அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள்.

*வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள்.

* மாணவர்கள் படிப்பதுவும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதும் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். படிப்பில் உங்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படும்.

* மொத்தத்தில் இந்த ஆண்டு மகரத்திற்கு சில கசப்பான மாற்றங்களைக் கொடுத்து  அதன் மூலம் எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here