Benefits Of Leo 2019

Benefits Of Leo 2019 : 

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு சம அளவிலான பலன்கள் ஏற்படும்.

உங்கள் எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு உகந்த  ஆண்டாக இருக்கும். உங்களுடைய அனைத்துத் துயரங்களுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் இலக்குகளை அடைவதற்குத் தயாராக நிலையில் இருங்கள். உங்களுடைய எழுச்சி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

குடும்பம் :
உங்கள் குடும்பத்தில் சிறியளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களுடன்  தவறான புரிந்துணர்வு இருக்கலாம்.

அதனால் அதைப்பற்றி அதிகம் வருத்தம் கொள்ளாதீர்கள். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சிறிது இழுபறிக்கு பின்பு உங்களுக்கான பாகம் வந்து சேரும்.

சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். திடீர் லாபங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது.

ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும்.

தொழில் :
புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறிது தடங்கல்களுக்கு பின்பு வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

மாணவர்கள் :

மாணவர்கள் கவன சிதறல் ஏற்படாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளால் கடுமையான சூழ்நிலைகளைச் சமாளித்து நம்மால் முடியும் என்ற உறுதியோடு செயல்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here