Ben Cake
Ben Cake

Ben Cake :

தேவையான பொருட்கள் ;

1) முட்டை – 2

2) ரவை பவுடர் – சிறிய கப்

3) சோடா உப்பு – 3 சிட்டிகை

4) தேன் – 1 ஸ்பூன்

5) வெண்ணெய் – தேவைக்கு

6) சாக்லேட் – 50 கிராம்

7) பால் – சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரதில் முட்டையை உடைத்து நன்றாக 30 நிமிடம் கலக்கி கொள்ள வேண்டும், பின் அதில் சர்க்கரை பவுடர், மிக்ஸியில் ரவையை அரைத்து எடுத்த ரவை பொடி, சோடா உப்பு 3 சிட்டிகை, 1 ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை 20 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

பிறகு, ஒரு வானலில், வெண்ணெய் தேய்த்து அடுப்பை குறைத்து விட வேண்டும், பின் அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை தோசை ஊற்றுவது போல ஒரு ஒரு கரண்டியாக ஊற்றி இரு புறமும் 30 வினாடி வெக வைத்து கொள்ள வேண்டும்.

தோசையாக வார்த்த பிறகு அதில் எந்த வித வெண்ணெய், நெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சேர்க்க கூடாது. இரு புறமும் வெக வைத்து எடுத்தால் சுவையான பேன் கேக் தயார்.

அடுத்து, ஒரு பாத்திரதில் சூடு தண்ணீர் ஊற்றி அதில் மீண்டும் ஒரு சிறிய பாத்திரம் வைத்து அதில் சாக்லேட் வைத்து அந்த சாக்லேடில் பால் சேர்த்து உறிக்கி எடுத்து தயாரித்து வைத்துள்ள பேன் கேகில் தடவி பின் அதன் மேல் இன்னொரு பேன் கேக் வைத்து மூடி விடுங்கள். சுவையான டோரா கேக் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here