Belly Reduce :
Belly Reduce :

Belly Reduce :

* முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களாலும், உடற்பயிற்சி மேற்கொள்ளாததாலும் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கி ஊளைசதை ஏற்படுகிறது.

அதில் ஒன்றும் தொப்பை. இப்பதிவில் தொப்பையை குறைக்க வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து மேற்கொள்ளப்படும் உணவுக்குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

தொப்பையை குறைக்க மேற்கொள்ளப்படும் எளிய உணவு முறைகள் :

1. தேன்: தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொண்டால் ,தொப்பையை குறைவதோடு உடல் எடையும் குறையும்.

2. தயிர்:குறைவான கலோரிகளும் ,ஊட்டச்சத்துகளும் மிகுந்தவை .இவை எடை குறைவதோடு தொப்பையை குறைக்க முக்கியமாக உதவுகிறது.

3. சிட்ரஸ் பழங்கள் :சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் “வைட்டமின் சி “நிறைந்துள்ளது. எலுமிச்சை ,சாத்துக்குடி இவற்றில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது இவை கொழுப்புகள் கரைவதோடு ,உடலை வனப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

4. பட்டை: தினமும் பட்டைத்தூளை நாம் அருந்தும் டீ, காபியில்
கலந்து குடிக்க உடலில் தொப்பை குறைவதோடு ,ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

5. தண்ணீர் : அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் அடிக்கடி குடித்துக்கொண்டு வந்தால் ,உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ,தொப்பை இல்லாமல் இருக்கும்.

6. க்ரீன் டீ: அனைவருமே க்ரீன் டீ குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு ,வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பை குறைந்துவிடும்.

7. பூண்டு ,இஞ்சி :தினமும் காலை ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து இரத்த ஓட்டம் சீராகும். இஞ்சியில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது .

இவை இன்சுலின் சுரப்பை சீராக வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குகிறது. தொப்பையை குறைக்க பெரிதும் துணைபுரிகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here