லியோ படத்துக்காக தொழில்நுட்ப கலைஞர்கள் காஷ்மீர் பட்ட கஷ்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடும் குளிரிலும் காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

தற்போது வரை 90 சதவீதம் இந்த படத்தின் காஷ்மீர் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் கடும் குளிரால் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்ட கஷ்டம் என்ன என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சன் டிவியின் youtube பக்கத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை கலைஞர்கள் பலரும் கடும் குளிரால் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்தும் அந்த குளிரிலும் வேலைகள் நடைபெற்ற விதம் குறித்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtube.com/watch?v=2GTgpcl5PXs&feature=shares