BeetRoot Chenna :
BeetRoot Chenna :

BeetRoot Chenna :

தேவையான பொருட்கள் :

  1. வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
  2. பீட்ரூட் – ½ கப்
  3. வெள்ளரி – 1
  4. பச்சை மிளகாய் – 2
  5. கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  7. கொத்தமல்லி – சிறிதளவு
  8. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

கொண்டைக்கடலையை சுத்தம் செய்து ஊற வைத்து பின் வேகா வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட்டை துருவி வைத்துகொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில், எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பின் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் பச்சை மிளகாய், பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்க வேண்டும் நன்றாக வதங்கியதும் அதில் சிறிது உப்பு, நறுக்கிய வெள்ளிரி துண்டு மற்றும் கொத்துமல்லி சேர்த்து கலந்து விட்டு இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் எலும்பிச்சை சாறு சேர்த்து பிறகு பரிமாறினால் சுவையான பீட்ரூட் சென்னா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here