Beauty Tips
Beauty Tips

Beauty Tips :

பாதாம் ஃபேஸ் பேக் மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

மேலும் வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.

பனிக் காலங்களில் உங்கள் முகம் வறட்சியாக உள்ளதா?… எளிமையான டிப்ஸ் :

1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க் :

பாதாம் பவுடர், காய்ச்சாத பால் கலந்து பேஸ்ட்டாக முகத்திலும், கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும்.

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

2. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்:

பாதாம் பவுடர், கடலை மாவு, மஞ்சள், ரோஸ் வாட்டர் இவைகளை கலந்து பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும்.

3. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்:

ஒருபவுலில் பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் கலந்து பேஸ்ட்டாக வைத்து தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம்.

இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here