Beauty Tips
Beauty Tips

Beauty Tips :

☕ முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகம் பிரகாசிக்க காபி தூள் பெரும்பங்கு வகிக்கிறது.

காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் சருமத்தை இறுக செய்யும்.

☕ காபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

☕ ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி,அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து வாரத்தில் மூன்று முறை l ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.

☕ தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டர் மற்றும் காபி தூள் சேர்த்து கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

☕ காபி தூள், பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் உடல் முழுவதிலும் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

☕ ஒரு பௌலில் காபி தூள் மற்றும் கற்றாலை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here