புத்தாண்டு தினத்தில் அஜித் மற்றும் விஜய் படங்களின் அப்டேட்ஸ் வெளியாகி மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast Vs Valimai in New Year : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் வரும் வரும் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

கிறிஸ்மஸ் பண்டிகை : சில சுவாரஸ்ய தகவல்கள்..

அதே போல் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் புத்தாண்டு தினத்தில் வெளியாக உள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

இதனால் புத்தாண்டு தினத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க எதுக்கு வெயிட்டிங்???