Beast Second Look Poster Record

பீஸ்ட் படம் படைத்துள்ள புதிய சாதனைகள் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Beast Second Look Poster Record : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

9 மாவட்டங்களில் மழை வருது, மழை வருது..எச்சரிக்கைத் தகவல்..

இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்க செல்வராகவன் உட்பட மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 300 ஆயிரம் லைக்குகளை பெற்று இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் லைக் பெற்ற போஸ்டராக இடம் பிடித்துள்ளது.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara | HD

பீஸ்ட் திரைப்படம் படைத்துள்ள இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.