பீஸ்ட் படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல OTT நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், டான்சிங் ரோஸ் சபீர், என பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் OTT உரிமையை மிகப்பெரிய தொகைக்கு நெட்ப்ளிக்ஸ் இணையதளம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.! 

இதனால் படம் OTTயில் வெளியாகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியான பின்னரே நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.