கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையிலும் கர்நாடகாவில் பெரும் சாதனை படைத்துள்ளது பீஸ்ட் திரைப்படம்.

Beast Record in Karnataka : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. விஜய் படத்தோடு கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

உலகமே இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இப்படியான சூழ்நிலையிலும் பீஸ்ட் திரைப்படம் கர்நாடகாவில் முன் பதிவில் மூலம் 30 லட்சம் வசூலை எட்டி உள்ளது.

தமிழ் நடிகர்களை பொறுத்தவரையில் அஜித், ரஜினியின் கோட்டையாக இருந்து வரும் கர்நாடகாவில் விஜய் திரைப்படம் இப்படி ஒரு சாதனையை படைத்தது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.