பொங்கல் ரேஸில் இருந்து பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast Movie Release Postponed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப்படத்துக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிஎஸ்கேவின் சீற்றம் குறையாத திரில் மேட்ச் : 8-வது வெற்றியை எட்டி முதலிடம்..களவிவரம்..

மேலும் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அசத்தலான சுவையில் Easy-யா செய்யலாம் மீன் வறுவல் | Fish Fry | Sea Food | Kalakkalcinema | Tamil HD

வலிமை ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானதுமே இரண்டு படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சில காரணங்களால் பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து படத்தின் post-production பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆவதில் கால தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பீஸ்ட் திரைப்படம் வலிமையுடன் மோதுவது என்பது கேள்விக்குறி தான் என கூறப்படுகிறது.