பீஸ்ட் படத்தில் 3 நடிகர்கள் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Beast Movie Caste Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தில் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் Liliput Faruqui ஆகியோர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.