பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Beast First Single Track Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

பாட்டு சும்மா தாறுமாறு.. இணையத்தை மாஸாக கலக்கும் அரபிக் குத்து பாடல் - இதோ வீடியோ

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் என இருவர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

பாட்டு சும்மா தாறுமாறு.. இணையத்தை மாஸாக கலக்கும் அரபிக் குத்து பாடல் - இதோ வீடியோ

இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஆக அரேபிக் குத்து என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் பாடியுள்ளார். ஆறு மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவித்த படி தற்போது பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.