aswin

Aswin : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்று மூன்று வகையான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி முழுவதுமாக இறங்கி உள்ளது.

இந்திய அணி சில வெளிநாட்டு தொடர்களில் தோல்வி அடைந்து வந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியுடன் தற்பொழுது அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்ள இருக்கின்றது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் தரமான போட்டியான ராஞ்சி போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை ஆஸ்., அணியுடன் இந்திய அணியின் முதல் போட்டி நடக்க இருக்கின்றது.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருக்க இருப்பதால் இந்த தொடரில் எந்த இந்திய வீரருக்கும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகுந்த கவனத்தில் உள்ளது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ராஞ்சி போட்டியில் பங்குபெற்றுள்ள அஷ்வின் மற்றும் இஷாந்திடம் தொடந்து நடக்க இருக்கும் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்தவும் மற்றும் புத்துணர்ச்சியாக செயல்படவும் ராஞ்சி போட்டியை விட்டு விலகவும் என்று கேட்டு கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here