பிக் பாஸ் பிரபலம் அசீம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் சீசன் 6ல் வின்னராக அசீம் 50 லட்சம் ரூபாயை வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அசீம் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை தற்போது செய்து காட்டியுள்ளார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடிகர் அசீம் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பரிசு தொகை ₹50 லட்சத்தில் இருந்து ₹25 லட்சத்தை கொரோனா காலகட்டத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்திற்கு தருவேன் என்று கூறியிருந்தார்.

அதனை அவர் தற்போது உறுதிப்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ₹25 லட்சத்தை தர தயாராக உள்ளேன், இதற்கு தகுதியானவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து என்னை ஜெயிக்க வைத்த அன்பான தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதனை ரசிகர்கள் பாராட்டி இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.