பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு திருமணம் ஆனதை மூடி மறைத்துள்ளார் இசை வாணி.

BB5 Isai Vani in Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இன்று ஒன்பதாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

தொடர் புயல்மழை : 15 பேர் பலி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் புலம்பெயர்வு..

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மீதமுள்ள 17 போட்டியாளர்களில் முதல் ஆளாக உள்ளே சென்றவர் பாடகி இசை வாணி.

கானா பாடகியான இவர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது தன்னுடைய குடும்ப கஷ்டத்தை பற்றி பேசினார். அப்பாவுக்கு பாடகராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீட்டில் சாப்பாடு இருக்காது பீஸ் கட்ட பணம் இருக்காது போட்டுக்க துணி இருக்காது ஒரு வேளை சாப்பாடு மட்டும் தான் தன்னுடைய கஷ்டத்தை கூறி போட்டியாளர்களையும் கண் கலங்க வைத்தார். ஆனால் இவர் தனக்கு திருமணமாகி விவாகரத்தானதை மூடி மறுத்துள்ளார்.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani

கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவருடன் இவருக்கு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.