BB4 Day2 Promo2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அனிதா சம்பத் கண்ணீருடன் பேசும் காட்சி வெளியாகியுள்ளது.

BB4 Day2 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

இரண்டாவது நாளான இன்றைக்கான இரண்டாவது புரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. இந்த வீடியோவில் அனிதா சம்பத் தன்னுடைய அம்மாவை பற்றி கண்ணீருடன் பேசுகிறார்.

அறந்தாங்கி நிஷாவை பார்க்கும் போது தனக்கு தன் அம்மாவின் ஞாபகம் வருவதாக தெரிவித்துள்ளார். நிஷாவை போலவே தன் அம்மா கருப்பாக இருப்பார் எங்கேயும் வெளியே செல்ல மாட்டார் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா அக்கா தன்னுடைய கலரை தனக்கு சாதகமாக்கி இன்று காமெடி நிகழ்ச்சிகளில் சாதித்துள்ளார். அவரிடமிருந்து என் அம்மா நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமென கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ranjanikovai/status/1313366556504551425?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.