Archana in Bigg Boss 4

அர்ச்சனாவை பட்டம் கொடுக்க வைத்து பற்ற வைத்துள்ளார் பிக் பாஸ்.

BB4 Day11 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதலில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் 17வது போட்டியாளராக ஜீதமிழ் தொகுப்பாளினி அர்ச்சனா உள்ளே சென்றுள்ளார்.

இவர் உள்ளே சென்றது காண ஆதாரமாக முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ விடியோவில் அர்ச்சனாவை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.

அந்த வகையில் நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் என்ற பட்டத்தை பாலாஜி முருகதாசுக்கு கொடுத்துள்ளார். அதன்பிறகு நொந்துபோன பட்டாசு பட்டத்தை சனம் ஷெட்டிக்கு அளித்துள்ளார்.

மேலும் சிவானி நாராயணனுக்கு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தை கொடுத்துள்ளார். நிஷாவுக்கு ஆமாம் சாமி என்ற பட்டத்தை அளித்து உள்ளார்.

அனிதாவுக்கு பிக் பாஸ் சீசன் 4 டிரன்டிங் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்து உள்ளார். ஆனால் இது பாசிடிவ் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியனுக்கு சவாலான போட்டியாளர் என்ற பட்டம் அளிக்கப் பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.